புதன், அக்டோபர் 29, 2014

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!




அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர்.
........

மஹாராஷ்டிராவில் பதிவான வாக்குகளில் பாஜக 42.4 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருப்பது சாதரணமானதல்ல; முன்னர் 16 சதவீதமாக இருந்த அதன் வாக்குவிகிதம் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஹரியானாவிலும் 4 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்குவிகிதம் இப்போது 52.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது பாஜகவின் முதற்பெரும் கடமை.
.....

மக்கள் கோஷங்களையல்ல, வழிகாட்டும் தலைமையையே நம்புகிறார்கள். சிறந்த தலைமை, தொண்டர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடு, அரசியலில் நேர்மை, தெளிவான அரசியல் நிலைப்பாடுகள், நேர்த்தியான பிரசாரம், இவை அனைத்தின் உறுதியான ஒருங்கிணைப்பு – இவையே பாஜகவின் வெற்றிக்குப் பிரதான காரணங்கள். இந்த வெற்றிகள் தொடரட்டும்.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (07.11.2014)
 

புதன், அக்டோபர் 22, 2014

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது



-கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்



எழுத்தாளர் ராஜேஷ்குமாரை தமிழ் எழுத்துலகில் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1,500க்கு மேற்பட்ட குற்றப்புனைவு (கிரைம்), அறிவியல் புனைவு புதினங்கள், 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ராஜேஷ்குமார் (66), உலக சாதனையாளர். தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட இவரது எழுத்துலக சாதனையை முறியடிக்க நீண்டகாலம் ஆகும். 
கோவையில் வசிக்கும் அவர் விஜயபாரதம் தீபாவளி மலருக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது. தமிழ் ஹிந்து இணையதளத்தில் இதன் முழு வடிவம் வெளியாகி உள்ளது.
  


உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.

அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்....


முழு நேர்காணலைக் காண்க: 

தமிழ் ஹிந்து (முதல் பகுதி)

தமிழ் ஹிந்து (இரண்டாம் பகுதி)


--------------------

விஜயபாரதம் தீபாவளி மலர்-2014