செவ்வாய், செப்டம்பர் 25, 2012

வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?


‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில்  நெரி கட்டுமா?’ என்ற பழமொழி  உண்டு.  ஆனால், அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ வெறியன் தயாரித்த முஸ்லிம்களைப் புண்படுத்தும் திரைப்படத்தால் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள்  கொந்தளித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, பல நாடுகளில் கலவரம்- இந்தியா உள்பட. அதன் உச்சகட்டமாக சென்னையில், அண்ணா சாலையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்   மாநகரக் காவல் ஆணையர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்....

கிறிஸ்தவ மத வெறியர்களின் கருத்து, ”உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வெகுளித்தனமானவர்கள்; அவர்களது வெறி பிடித்த மதமே அவர்களை மிருகம் ஆக்குகிறது” என்பதுதான். படத்தின் தலைப்பே அதுதானே? அதை நிரூபிக்க  அவர்கள் எடுத்த படம் அதன் பலனை அடைத்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை தங்கள் பதிலடியால் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது ‘முஸ்லிம்களின் முரட்டுத்தனம்’ (Arrogance Of Muslims) என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் என்று தங்கள் வன்முறையால் நிலைநாட்டி இருக்கிறார்கள்...

மொத்தத்தில், இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் ரத்தம் சிந்துவது தொடர்கிறது. அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும். அப்படி மீண்டும் ஒரு உலகப்போர்  மதவெறி காரணமாக மூளுமானால், நாம் யாரும் மிச்சம் இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்.

-------------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

விஜயபாரதம்  
.

புதன், செப்டம்பர் 19, 2012

மண்குடமும் பொன்குடமும்


அண்மையில் குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைதண்டனை உள்பட 29 பேருக்கு கடும் தண்டனைகளை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது....

நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே. அதற்குக் காவல்துறையினர் வழக்கின் துவக்கத்தில் இருந்தே உறுதியான சாட்சியங்களைச் சேகரிப்பதும், நடுநிலையாகச் செயல்படுவதும் அவசியம். ஆளும் தரப்பின் இடையூறு இல்லாமல் இருந்திருந்தால் தினகரன் வழக்கு நீர்த்துப் போயிருக்காது. அது எவ்வளவு உண்மையோ, அதேபோல, குஜராத் மாநில அரசின் தலையீடு இல்லாததால் தான் நரோடா பட்டியா கலவர வழக்கில் அம்மாநில காவல்துறை ஆளும்கட்சிப் பிரமுகருக்கு எதிராகவே வழக்குப் பதிய முடிந்தது என்பதும் உண்மை. தமிழகத்திலோ, கேரளத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ இத்தகைய நடைமுறையைக் காண முடிகிறதா?...

---------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (21.09.2012)
.

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?


‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி உண்டு. கடந்த வாரம் நாடாளுமன்றம் பாஜகவின் போராட்டத்தால் முடக்கப்பட்டபோது அதை எதிர்த்து எழுந்த சில குரல்களைக் கேட்டவுடன் அந்தப் பழமொழி தான் நினைவுக்கு வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலை விஞ்சும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் காரணமாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முகத்தில் வண்டி வண்டியாக கரி அப்பிக் கிடக்கிறது. இந்த ஊழல் நடந்தபோது நிலக்கரித் துறை அமைச்சர் பதவி வகித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்கே என்பதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாஜக கோரியது. இந்தக் கோரிக்கையை முன்வைத்தே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமளியில் ஈடுபட்டது. அப்போது தான் ஜனநாயகத்தின் மாண்பை விளக்கும் அற்புதமான உபன்யாசகங்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------------------------
விஜயபாரதம் (07.09.2012)
.
.