செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்

பாதாளத்தின் அதிபதி குபேரன். அவனது செல்வச் செழிப்பு அளவிடற்கரியது என்று புராணங்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது உண்மையா என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்புவதுண்டு. அண்மையில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெளியாகியுள்ள கனிமவள ஊழல்கள் குபேரனின் செல்வம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவையாக இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் வெளியாகியுள்ள கிரானைட் ஊழல், அதன் பின்புலத்தில் உள்ள அதிகார வர்க்கத்தையும், பாதாளத்தைச் சுரண்டும் அரசியல்வாதிகளையும், அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொழிக்கும் பெரு வணிகர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------------------

விஜயபாரதம் (07.09.2012)

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

மானம் கெட்ட கலைஞரின் மாபெரும் நாடகம்


இலங்கைவாழ் தமிழரின் உரிமைகளை மீட்பதற்கு என்று முழங்கியபடி அறிவிக்கப்பட்ட டெசோ மாநாடு ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. அதற்குள் நடத்தப்பட்ட நாடகங்கள் தான் எத்தனை எத்தனை? இந்த நாடகதாரிகளை நம்பி இருந்ததால் தானே லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் போர்முனையில் கொல்லப்பட்டனர்? ஆனாலும், சுயநல நோக்குடன் சிறிதும் வெட்கமில்லாமல் இம்மாநாட்டை நடத்தி இருக்கிறார், கருணாநிதி.

ஆகஸ்ட் 12 ம் தேதி டெசோ மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்படும் என்று கடந்த ஏப். 30 ம் தேதி திமுக கூட்டிய சிறு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பிறகு திடீரென மாநாடு இடம் சென்னை ஒய்.எம்.சி.. மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான செய்திகள், விளம்பரங்கள் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு வந்தன. டெசோ மாட்டுக்கு வருவோர் எண்ணிக்கை குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடானமுரசொலி தினசரி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன்படி லட்சக் கணக்கான மக்கள் டெசோ மாநாட்டில் கலந்துகொள்வர் என்ற கணிப்பு பரவி இருந்தது.

இந்நிலையில் மாநாட்டு தினத்துக்கு சில தினங்கள் முன்னதாக, இம்மாநாட்டுக்கு சென்னை காவல் ஆணையர் அனுமதி மறுத்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற நோக்கில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு டெசோ மாநாடு நடத்த விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதற்காக திமுக முன்வைத்த வாதங்களில் தான் எவ்வளவு சொத்தைகள்?

முதலில், இந்த மாநாட்டுக்கு லட்சக் கணக்கானோர் வருவார்கள் என்று கூறிக் கொண்டிருந்த கருணாநிதி, தமது வழக்குரைஞர் மூலமாக, ''டெசோ மாநாட்டில் 8,000 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள்'' என்று பிரமாணம் செய்யவைத்தார். ''திமுக வேண்டுகோளின்படி இந்திய அரசு ஆதரித்து, ஐக்கிய நாடுகள் மன்றம் ஜெனீவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தை மேலும் வலியுறுத்துவதுதான் இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம்'' எனவும் அவர் விளக்கம் அளித்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் மாநாடு நடத்துவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, மாநாட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், திமுக தலைமையகமான அறிவாலயத்திலேயே உள்ளரங்கு நிகழ்ச்சியாக 'டெசோ கருத்தரங்காக' நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்றால் என்ன என்று தமிழ் மக்கள் அன்று நிதர்சனமாகப் புரிந்துகொண்டார்கள்.

எப்படியோ, கடைசிநேரத்தில் நீதிமன்றத் தலையீட்டால் அனுமதி கிடைத்து, ராயபுரம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் டெசோ மாநாடு நடத்தப்பட்டு விட்டது. இப்போதுமாநாடு வெற்றி’’ என்று முழங்கி இருக்கிறார் மு.கருணாநிதி - வெற்றிக்கு இலக்கணம் என்ன என்று தெரியாமல்.

''12.8.2012 அன்று சென்னையில் மாலையில் நடைபெற்ற 'டெசோ' மாநாடு அதனையொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவே நடைபெறாது என்றும், அப்படியே நடைபெற்றாலும் வெளிநாட்டில் இருந்தோ, இலங்கையில் இருந்தோ, வடமாநிலங்களில்இருந்தோ இலங்கை தமிழர் பிரச்னைகளில் ஆர்வமும், அக்கறையும் உடைய யாருமே வரமாட்டார்கள் என்றும், கருணாநிதி ஏமாறப் போகிறார் என்றும் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு `டெசோ' மாநாடு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெற்று முடிந்துள்ளது'' என்று ஓர் அறிக்கையில் கருணாநிதி கூறி இருக்கிறார்.

அப்படியே இருக்கட்டும், மாநாடு வெற்றி பெறாது என்று மனப்பால் குடித்த யாரோ (வேறு யார் ஜெயலலிதாவைத் தான் ஐயா ஜாடையாகக் குத்துகிறார்) ஒருவரது முகத்தில் கரியைப் பூசியதிருக்கட்டும். இம்மாநாட்டால் இலங்கை வாழ் தமிழர்களின் துயரத்துக்கு என்ன தீர்வு காணப்பட்டது? இப்போதும் முள்வேலி முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் துன்பங்களை இந்த மாநாடு போக்கிவிட்டதா? அராஜகமான முறையில் கொத்துக்குண்டுகளை வீசி ஈழப்போரின் கடைசி நாட்களில் லட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சவைக் கண்டித்தோ, மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையிலோ, ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?

சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் (26.04.2012) பேசிய கருணாநிதி, ”தனித் தமிழ் ஈழம் காணாமல் இந்த உலகை விட்டுப் போக மாட்டேன்என்று சபதம் செய்தாரே! அவ்வாறு தனி ஈழம் குறித்த தீர்மானம் எதையும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றாமல் கருணாநிதியை தடுத்தது எது? ‘தனித் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்ற மத்திய அரசு உத்தரவு அவரைக் கட்டிப் போட்டுவிட்டதா?

டெசோ மாநாட்டின் துவக்கத்தில் பேசிய கருணாநிதி, ‘தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்று பேச்சாளர்களுக்கு நிபந்தனை விதித்து குறிப்பிடத் தக்கது. அதாவது சுதந்திரத் தமிழ ஈழம் குறித்து யாரும் எக்குத் தப்பாக முழங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே அவ்வாறு அவரை பேசச் செய்திருக்கிறது. இத்தனையும் செய்துவிட்டு, ''ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக நிற்போம்; ஈழத் தமிழர்கள் மீது அக்கறையுடன் தி.மு.. தொடர்ந்து ஆதரவாக இருப்பது வரலாற்று உண்மை'' என்று வேறு பத்திரிகையாளர்களிடம் கூறினார். கேப்பையில் நெய் வடிகிறது என்றாலும் செய்தி வெளியிட சில ஆத்மாக்கள் தமிழகத்தில் இருக்கின்றனவே!

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆயினும், சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் அகதிகளாக, பிச்சைக்காரர்களாக, முகாம்களில் கேவலமாக சித்திரவதைப்படுகிறார்கள். தமிழர்களின் நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வழிபட்டுத் தலங்கள் புத்த விகாரங்களாக மாற்றப்படுகின்றன. தமிழ்ப் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை தொடர்கிறது. வீடு புகுந்து வல்லுறவுக்கு உட்படுத்தும் சிங்கள ராணுவ வீரர்களால் கருத்தரித்த தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித்து வருகிறது. இவற்றில் எதையாவது, நடந்து முடிந்த டெசோ மாநாடு கண்டித்ததா?

ஆயினும், டெசோ மாநாடு அரசின் தடையை மீறி வெற்றி பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகிறார் கருணாநிதி. இவருக்கு ஏற்றாற்போல, தேவையில்லாமல் மாநாட்டுக்கு தடை விதித்து தன முகத்தில் மீண்டும் கரி பூசிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசியல் இவ்விருவரிடையிலான களமாக மாறிவிட்ட சூழலில், இலங்கைத் தமிழரின் வாழ்க்கை இவர்களுக்கு பகடைக் காயாக மாறி இருக்கிறது.

இம்மாநாட்டில் திமுகவின் உறுதுணை நண்பரான காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. ராம்விலாஸ் பஸ்வான் மட்டுமே வந்த தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர். பவார் வராமல் தனது பிரதிநிதியை அனுப்பிவைத்தார். பல திமுக கூட்டணிக் கட்சிகள் கடைசி நேரத்தில் 'ஜகா ' வாங்கியதற்கு, திமுக ஏதேனும் சங்கடமான தீர்மானத்தை நிறைவேற்றிவிடும் என்ற உளவுத் துறை எச்சரிக்கையே காரணம் என்று காரணம் கூறப்பட்டது. இதிலும் நமது உளவுத் துறையின் சாமர்த்தியம் பல்லிளித்தது. தண்டனிடும் நிலையில் உள்ள திமுக எவ்வாறு வீர வசனங்களுடன் கூடிய தீர்மானத்தை நிறைவேற்றும் என்று சற்றேனும் சிந்திக்க வேண்டாமா உளவுத் துறை? இத்தகைய உளவுத் துறை சொல்வதை நம்பித் தான் நமது பாதுகாப்பு அமைப்புகள் நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கின்றன!

மதுரையில் 1985 ல் நடத்தப்பட்ட முதலாவது டெசோ மாநாட்டில் அரசியல் வேறுபாடின்றி பல்வேறு தேசியத் தலைவர்களும் குழுமினர். அந்த மாநாட்டுக்கு அன்றைய பாஜக தலைவர் வாஜ்பாய் வந்திருந்ததை இப்போதும் கூட கருணாநிதி சுட்டிக்காட்டினார். அத்தகைய ஆதரவு நிலை இப்போது இல்லாமல் போனதன் காரணம் என்ன? முன்னிருந்த நிலையை விட மோசமான சூழல் தற்போது நிலவும்போது, அந்த நிலையை விட அதிகமான ஆதரவு இரண்டாவது டெசோ மாநாட்டுக் கிடைத்திருக்க வேண்டுமே? ஏன் அவ்வாறு நிகழவில்லை?

ஏனெனில், 1985 ல் நடந்த மாநாடு உள்ளன்புடனும், உத்வேகத்துடனும் நடத்தப்பட்டது. அதற்கு அரசியல் பின்புலம் இருந்தபோதும், அதில் ஒரு தார்மிக ஆவேசம் இருந்தது. இன்று நடத்தப்பட்டது நாடகம் என்பதை திமுக தொண்டன் கூட உணர்ந்திருக்கிறான். அதனால் தான் இந்த நாடகக் கூட்டம் சொதப்பலாக முடிந்தது.

இந்த மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் வந்திருந்ததாக கருணாநிதி அகம் மகிழ்ந்திருக்கிறார். உண்மையில், .நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியுள்ள சூழலில், இம்மாநாடு சர்வதேச அளவிலான மாநாடாக மாறி இருக்க வேண்டும். அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொண்டவர் கருணாநிதி தான். இம்மாநாடு, கருணாநிதி, அன்பழகன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் இன்னமும் அரசியல் அரங்கில் இருப்பதைக் காட்ட நடத்தப்பட்ட ஓரங்க நாடகம் மட்டுமே. அதில் எவ்வாறு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் காட்சிகள் அரங்கேற முடியும்?

1985 மாநாட்டில் வாஜ்பாயை பங்கேற்கச் செய்த கருணாதி, இம்முறை ஏன் பாஜகவை தவிர்த்தார்? சோனியா அம்மையாரின் கண்டனத்துக்கு அஞ்சியா? அல்லது ஸ்பெக்ட்ரம் ஊழல் நெஞ்சின் ஓரம் குடைந்துகொண்டே இருக்கிறதா?

இம்மாநாடு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ''தி.மு.., தலைவர் கருணாநிதி, பராசக்தி நாடகத்தை, 'டெசோ' என்ற பெயரில் மீண்டும் அரங்கேற்றியுள்ளார். இந்த மாநாட்டால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்துவிட்டு, எஞ்சியுள்ளவர்களின் நலனுக்காக, 'டெசோ' மாநாட்டை நடத்துவதாக கருணாநிதி கூறுகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு..,வால் எப்போதும் நன்மை கிடைக்காது'' என்று விளாசி இருக்கிறார்.

மொத்தத்தில், டெசோ மாநாடு என்ற பெயரில் கருணாநிதி நடத்த விரும்பிய சாகசம் வெறும் கழைக்கூத்தாக மாறிப்போனது. ஈழத் தமிழரின் நலன் குறித்து தமிழக திராவிடக் கட்சி எதற்கும் உண்மையான அக்கறை இல்லை என்பதையும் இம்மாநாடு காட்டிக் கொடுத்திருக்கிறது. இனிமேலும் இந்தியத் தமிழர்களை நம்பி தங்கள் உடலையும் மனதையும் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வை இம்மாநாடு இலங்கை வாழ் ஈழத் தமிழருக்கு அளித்திருக்குமானால், இம்மாநாடு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

---------------------------------------------------------------------------

வெற்றுத் தீர்மானங்கள்

சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் விவரம்:

*
.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

*
ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் .நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

*
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு .நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

*
தமிழீழ பகுதிகளில் இருந்து உடனடியாக ராணுவத்தை சிங்கள அரசு விலக்கி கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும், உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப்பெறுவதை நேரடியாக கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

*
இலங்கையில் இருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாக சிறையில் வாடும் ஈழத்தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை .நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.

*
ஈழத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதுடன், அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஒப்பந்த ஆணை இந்தியாவில் பிற்பற்றப்பட வேண்டும்.

*
இலங்கை தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சனையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
|
*
இலங்கை தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும் ன்பது ள்பட ல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

------------------------------

விஜயபாரதம் (31.08.2012)

.