திங்கள், ஏப்ரல் 21, 2014

தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!



....ஆரம்பத்தில் பாஜகவையும் அதன் கூட்டணி முயற்சிகளையும் கண்டுகொள்ளாத தமிழக அரசியல் கட்சிகள், பிறகு அதனை ஏளனமாக விமர்சித்தன. மோடி அலை எங்கும் வீசவில்லை என்பதே பாஜகவின் எதிரிகளின் தொடர் முழக்கமாக இருந்தது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் பாஜகவை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்த்து வந்தன. பாஜக அரசியல்களத்தில் இல்லாதது போலவே அவை நடித்துவந்தன.

ஆனால், தேர்தலுக்கு 10 நாட்கள் இருக்கும்போது திடீரென, தமிழக அரசியல்வானில் ஏற்பட்ட மாற்றம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தைவிட வேகமான தோற்றமாகக் காட்சி தருகிறது. இதற்கு தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுவரும் அபரிமித ஆதரவு ஒரு காரணம் என்றால், தமிழகத்தில் ஆர்ப்பாட்டமின்றிப் பரவிவரும் மோடி ஆதரவு நிலையும் ஒரு காரணம்....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------
விஜயபாரதம் (02.05.2014)

திங்கள், ஏப்ரல் 14, 2014

புத்தாண்டில் ஒரு புது சபதம்!



Lotus Blooms

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம்..................

...................................................................................................................................................

எனவே நடைபெறவுள்ள இத்தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை முதலில் உறுதிப்படுத்துவோம்! அடுத்து, இத்தேர்தலில் வெல்ல வேண்டியவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி,  நல்லோரை வெற்றி காணச் செய்வோம்! இதுவே இன்று துவங்கும்  ‘ஜய’ ஆண்டின் புத்தாண்டு சபதமாக இருக்கட்டும்!

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம் (25.04.2014)