வெள்ளி, ஜூன் 13, 2014

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி



மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது

இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம்.
................
..............
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (20.06.2014)
.

வியாழன், ஜூன் 05, 2014

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!


நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது.

டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர் மோடியின் முதல் ஒருவாரகால செயல்பாடுகள் அவர் செல்லும் திசையை தெளிவாகவே காட்டுகின்றன.

‘தனது அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்’ என்று துவக்கத்திலேயே பிரகடனம் செய்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து நாட்டை உயர்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். தேர்தல் கால விரோதங்கள் தொடரக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தான் சார்ந்த கட்சியினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையும் மதிப்பையும் அளிப்பது போலவே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினரின் மதிப்பை உணர்ந்தவராக அவர்களின் ஒத்துழைப்பையும் மோடி நாடி இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ள அதீதப் பெரும்பான்மை பலம் மோடியை மேலும் பண்புள்ளவராகவே மாற்றி இருக்கிறது...
.............
....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம்

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு


பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.

இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல பிரதேசங்களிலும் பாஜக வெற்றி கண்டுள்ளது.

மணிப்பூர், மிசோரம், சிக்கிம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. பெரிய மாநிலங்களில் கேரளத்தில் மட்டுமே பாஜகவால் சாதிக்க முடியவில்லை. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக.

ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில்,  தெலங்கானா பகுதியில் அம்மாநிலத்தின் உதயத்திற்குப் போராடிய தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெற்றுள்ளது.  எதிர்பார்த்தது போலவே,  இம்மாநிலத்தின் இரு பகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. மாறாக பாஜக இரு பிரதேசங்களிலும் தனது வெற்றிகளை உறுதியாகப் பதிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் தே.ஜ.கூட்டணி  37.6% வாக்குகளுடன், 19 தொகுதிகளில் வென்றுள்ளது.
.................................
................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம்

மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உடன்
பிரதமர் நரேந்திர மோடி
சாதாரண தேநீர்க்கடைக்காரரின் மகன், மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆவதென்பது, சரித்திர நிகழ்வு.

வாரிசு அடிப்படையில் நாட்டை ஆளும் உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு, மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்திவந்த காங்கிரஸையும், ஆளும்கட்சியாக இருந்துகொண்டு பல அராஜகங்களை நிகழ்த்திய அதன் கூட்டணியையும் ஒருசேர முறியடித்திருக்கிறார் மோடி.

இது கண்டிப்பாக மோடியின் வெற்றியே. அதேசமயம் மோடியின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்த மகத்தான சாதனை.

16வது மக்களவைத் தேர்தலில் வாகை சூடிய மோடி, ஈட்டியின் கூர்முனை என்றால், அதன் பிடியாகவும், கம்பாகவும் இருந்தவர்கள் பலர். ஈட்டி முனை மழுங்கி இருந்தாலும் பயனில்லை;  ஈட்டியின் பின்னுள்ள கம்பு இல்லாமல் இருந்தாலும் பயனில்லை. அந்த ஈட்டியை எறியும் உத்வேகமும் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அந்த ஈட்டி சரியான இலக்கைத் தாக்கி வெல்ல முடியும்.

அந்த வகையில், மோடி என்ற அற்புதமான, தன்னிகரற்ற தலைவரை கூர்முனையாக முன்னிறுத்தி, அவருக்குப் பின் படையெனத் திரணடு பணியாற்றிய பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, சங்க பரிவார் இயக்கங்கள் அனைவருக்கும், இந்த வெற்றியில் பங்குண்டு.

இதனை மோடியே தேர்தல் பிரசாரத்தில் ஒருசமயம் குறிப்பிட்டார். தேசத்தில் வீசுவது மோடி அலையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, “இந்த அலை பாஜக அலை. காங்கிரஸின் நிர்வாகத் திறமையின்மைக்கும், ஊழலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் எதிரான அலை” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறினார் நரேந்திர மோடி.

தேர்தல் முடிவுகள் வந்தநிலையில் ஊடகங்களுக்கு தனது சேதியாக மோடி கூறியது இதுதான்:  “பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இனி மக்கள் நலனுக்கான அரசியல் தொடரும்.”

இந்த முற்றுப்புள்ளியிலிருந்து தான் தேசத்தின் வளர்ச்சிக்கான தொடர்புள்ளிகள் துவங்குகின்றன.

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது. மோடியை ஆர்எஸ்எஸ் தலைமை போர்ப்படைத் தளபதியாக முன்னிறுத்தியது ஏன் என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.

தவிர, மோடியை மகுடம் சூடவைப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட பஞ்சதந்திர அணுகுமுறைகளுக்கும் இவ்வெற்றியில் பெரும் பங்குண்டு. மோடியின் தன்னிகரற்ற தலைமையை முன்னிலைப்படுத்தியது, பாஜகவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியது, ஊடகங்களை வழிக்குக் கொண்டுவந்தது, சங்கபரிவார் இயக்கங்களின் அர்ப்பணிப்பான கடும் உழைப்பு ஆகியவை, பாஜகவின், மோடியின் மகத்தான வெற்றிக்கு வித்திட்ட பஞ்சதந்திரங்கள்...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-----------
விஜயபாரதம்

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…




   தேசம் எதிர்பார்த்துக் காத்திருந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

பாரதத்தின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் தீர்மானித்துவிட்டனர்.

வாராதுவந்த மாமணியாக, வளர்ச்சியின் நாயகனாக தேசம் முழுவதும் திக்விஜயம் செய்த மோடியின் கடும் உழைப்புக்கும் அவரைத் தலைமையாகக் கொண்டு இயங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அற்புதமான பரிசாக, யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றி கைகூடி இருக்கிறது.

இந்தியாவின் வரலாறு திருத்தி எழுதப்படும் இனிய தருணம் இது…

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

---------------
விஜயபாரதம்