வெள்ளி, ஏப்ரல் 26, 2013

மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்

நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்


இஸ்லாமிய பயங்கரவாதத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட கோவை வட்டாரத்தில், மீண்டும் இஸ்லாமிய வெறியர்களின் கொலைவெறியாட்டம் துவங்கி உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை எண்ணிக் கொள்ளும் வஹாபியிச இஸ்லாமிய இயக்கங்களால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு நேரிட்டிருக்கிறது.
மஞ்சுநாத்

 

நீலகிரியில் கொலைவெறித் தாக்குதல்: 

 

கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.04.2013), மாலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் ஏ.டி.சி.திடலில், இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்தனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டம் முடிந்து, தனது சரக்கு ஆட்டோவில், எச்.எம்.டி. பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் (34). அப்போது 20 இரு சக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள், ராகவேந்திரர் கோவில் அருகே ஆட்டோவை மறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அவர் வந்த சரக்கு ஆட்டோவைத் தாக்கிய அந்தக் கும்பல், ஆட்டோவிலிருந்து மஞ்சுநாத்தை இழுத்துவந்து நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் அடைந்துள்ளார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த மக்களைக் கண்டவுடன் கொலைவெறிக் கும்பல் தப்பிவிட்டது. அவர் தற்போது கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து உதகையில் 15-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக தமுமுக- அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் (28), பைசல் (27), அப்துல் ரஹ்மான் (38), இம்தியாஸ் (24), பைரோஸ் (20) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் செய்தி -கோவை (18.04.2013)

 

மீண்டும் மூவர் மீது தாக்குதல்:


உதகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து குன்னூரில் ஏப். 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது. அது தொடர்பான சுவரொட்டியை இந்து முன்னணியினர் குன்னூர் பஸ் நிலையம் அருகே 16 -ம் தேதி இரவு ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.
வெங்கட்ராஜ்

இந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஐவர் தாக்கப்பட்டனர்; இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவர்களில் இந்து முன்னணியின் (இன்னொரு) மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் (32), தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெங்கட்ராஜ் என்ற இந்து முன்னணி தொண்டர் உடல் முழுவதும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடால் கிழிக்கப்பட்டுள்ளார்.

ஜெயகுமார்
ஜெயகுமார் என்ற இந்து முன்னணி தொண்டர் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கோவை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

காவல்துறையினர் இருக்கும் போதே, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குன்னூரைச் சார்ந்த ஐயூப் (27), யூனஸ் (40), முஸ்தபா (37), சதாம் உசேன் (22), அஸ்கர் அலி (39) ஷேக் இஸ்மாயில் (29), முபாரக் (34), அம்ஜத் (29, பைசல் (22), நையாஷ் (24), சாரூக் (22), சலீம் (24) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடும் நால்வரையும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், மாநிலச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சேவா பாரதி மாநிலத் தலைவர் ரங்க. ராமநாதன் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகள், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து காயம் பட்டவர்களை சந்தித்து ஆறுதலும் ஆசியும் வழங்கினர்.
தினமலர் செய்தி -கோவை (18.04.2013)


இந்து இயக்கத்தினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஏப். 19-ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இந்த கடையடைப்பு மூன்று மாவட்டங்களிலும் 90 சதவீதம் வெற்றியடைந்தது. பெரிய அளவில் பிரசாரம் செய்யாமலே, இந்த கடையடைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இம்மூன்று மாவட்டங்களிலும் இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திவரும் அத்துமீறிய அட்டகாசங்களால் மக்கள் வெறுப்பு அடைந்திருப்பதே காரணம்.

 

சில அண்மைக்கால நிகழ்வுகள்:

 

  • 1. கடந்த ஆண்டு (06.11.2012) மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் எஸ்.ஆனந்த் முஸ்லிம் குண்டர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் ஆனந்தின் முகம் கடுமையாக சிதைக்கப்பட்டது. தெய்வாதீனமாக, தீவிர மருத்துவ சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். எனினும் இன்னமும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை.இத்தாக்குதலுக்கு காரணமான கயவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • 2. கோவையில் சில இடங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அந்த இடங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பொது வழித்தடங்களைப் பயன்படுத்தக்கூட விடாமல் முஸ்லிம்கள் இந்துக்களைத் தடுக்கின்றனர்.
  • கோட்டை மேடு, உக்கடம் - அல்அமீன் காலனி, செல்வபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதிகளில் இது தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய ஆட்சியரும், காவல் துறையினரும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.
  • 3. அண்மையில், குனியமுத்தூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சிலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம், இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இந்த அநாகரிக செயலுக்கு காரணமாக முஸ்லிம் இளைஞர்களே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, சென்ற வாரம் குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் மக்களே யாரும் அழைப்பு விடுக்காமலே பந்த் அனுசரித்தது குறிப்பிடத் தக்கது. தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில், இந்த கொடிய செயலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
  • 4. போத்தனூரில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஹிந்து ஒருவர் நடத்திய திருமண விழாவில் புகுந்து தகராறு செய்து, திருமனத்த்ற்கு வந்தோரை தாக்கியது முஸ்லிம் மதவெறிக் கும்பல். இதுவரை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.
  • 5. ஏற்கனவே, கல்லாமேடு கோவில், அன்னமார் கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள விநாயகர் கோயில் மீது மலத்தை வீசுவது இங்குள்ள ‘சகோதரத்துவ’ முஸ்லிம்களின் திருப்பணியாக உள்ளது. இக்கோயிலில் ஈஸ்வரர் தேரோட்டம் நடத்த இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனால் என்ன ஆகும் என்பதற்கு கோட்டை மேடு மிகச் சரியான உதாரணம். முன்பு அக்ரஹாரமாக இருந்த இப்பகுதியில் இப்போது இந்துக்கள் வாழ்வது கேள்விக் குறியாகி உள்ளது.
  • 6. கடந்த 2010 விநாயக சதுர்த்தியின் போது, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டு திருப்பூரில் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி தொண்டர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
  • 7. திருப்பூரில் விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் பெரிய கடைவீதியில் உள்ளது. இதனை சிறுவர் விளையாட்டுப் பூங்கா என்ற பெயரில்ஆக்கிரமித்தனர் இஸ்லாமிய அமைப்பினர். பெரிய கடைவீதியில் இஸ்லாமியர் பெரும்பான்மை பெற்றதன் விளைவு இது. இந்து முன்னணியின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
  • 8. கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் வீட்டில் கடந்த ஏப்ரல் 13- ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் செய்த தவறு, கோவையில் நிகழ்ந்துவரும் முஸ்லிம் வஹாபியிச இயக்கங்களின் அத்துமீறல்களைத் தொகுத்து ‘வரும் முன் காப்போம்’ என்ற புத்தகமாக வெளியிட்டது தான்).

 

அரசுக்கு வேண்டுகோள்:


தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் பயங்கரவாதிகள் தலையெடுத்து வருவது திண்ணமாகத் தெரிகிறது. இந்த ஆபத்தான நிலையை சரிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக, இந்துக்கள் தாக்கப்படுவதை அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது.

கோவை நகரம் ஏற்கனவே 1998-ல் வெடிகுண்டு தாக்குதலால் நிலைகுலைந்த நகரம். அங்கும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

இப்போதைய தாக்குதலில் மனிதநேய மக்கள் கட்சியின் தாய் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சம்பந்தப்பட்டுள்ளது. இக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சென்ற சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்களைப் பெற்ற கட்சி என்பது குறிப்பிடத் தக்கது. அதிமுகவின் தோழமைக் கட்சி என்ற ஹோதாவுடன் இக்கட்சி நடத்தும் கொடூரங்களை காவல்துறை கண்டுகொள்ளாவிட்டால், அரசுக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும்.

தவிர, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அதன் அரசியல் பிரிவான இந்திய ஜனநாயக கட்சி, தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் தீவிர முஸ்லிம் உணர்வுகளை இஸ்லாமிய இளைஞர்களிடையே பரப்பி வருகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்களின் சொற்களை மதிக்காத போக்கு அந்த சமுதாயத்தில் ஏற்பட்டு வருவதாக, அந்த சமுதாயப் பெரியவர்களே வருந்துகின்றனர்.

'இளைதாக முள்மரம் கொல்க' என்பது திருவள்ளுவர் காட்டிய நெறி. எனவே, இத்தகைய நாசகார சக்திகளை இப்போதே களையெடுக்க அரசு துணிவாகச் செயல்பட வேண்டும். அதுவே இஸ்லாமிய சமுதாயத்துக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது.

-----------------------------------------------------

அரசே விழித்தெழு!


கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து மதவெறியர்கள் நடத்திவரும் கொட்டத்தை அடக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலதரப்பிலும் எழுந்துள்ளன.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம்:
சமீபகாலமாக கோவை மண்டலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கரம் ஓங்கி உள்ளது. போத்தனூரில் திருமண மண்டபத்தில் நுழைத்து தாக்குதல், குனியமுத்தூரில் அம்மன் சிலை உடைப்பு, நீலகிரியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல், திருப்பூரில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் என்று முஸ்லிம் வெறியர்களின் கோட்டம் எல்லை மீறி வருகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயலாளர் லட்சுமண நாராயணன்:
முஸ்லிம் பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடத்தவும், மயானம் செல்லவும் விடாமல் முஸ்லிம்களால் இந்துக்கள் தடுக்கப்படுகிறார்கள். முஸ்லிம் பகுதிகளுக்குள் காவல்துறையினர் செல்லவே அஞ்சும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழல் கோவையின் பல பகுதிகளில் நிலவுகிறது. முஸ்லிம் என்றாலே மக்கள் அஞ்சி ஒதுங்கும் நிலையை உருவாக்குவதே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, விஷமிகளை ஒடுக்குவதே உடனடித் தேவை.
சேவாபாரதி மாநிலத் தலைவர் ரங்க.ராமநாதன்:
முஸ்லிம் இளைஞர்கள் பாப்புலர் பிரன்ட், தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக போன்ற தீவிர இஸ்லாமிய இயக்கங்களில் தான் சேர்கின்றனர். இவர்களுக்கு இடையிலான போட்டியில் பந்தாடப்படுவது இந்துக்களும் நகரின் ஒற்றுமையும் தான். முஸ்லிம் பெரியவர்கள் தங்கள் சமுதாய இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்:
கோவை வட்டாரத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே முஸ்லிம் அத்துமீறல்கள் தொடர்கின்றன. 'லவ் ஜிஹாத்' மூலமாக இந்து பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதும், இப்பகுதியில் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினரில் ஒரு சிறு குழு தொடர்ந்து இந்து இயக்க நிர்வாகிகளைத் தாக்குவதும் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இது கோவைக்கு நல்லதல்ல.
பேரூர் சாந்தலிங்கர் திருமடம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார்:
கோவையில் 1980-களில் இருந்தே இஸ்லாமிய தீவிரவாதம் பெருகி வந்துள்ளது. இதுவரை இந்துக்கள் அமைதிகாத்தே வந்துள்ளனர். இந்து இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால், இப்போது வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசு இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.
கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக):
கோவையில் முஸ்லிம்கள் அதிமாக உள்ள பகுதிகளில் அப்பகுதியின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. புதிது புதிதாக முஸ்லிம் (பிரத்யேகமான) குடியிருப்புகள் உருவாகின்றன. ஆண்டாண்டு காலமாக இருந்த தெருக்களின் பெயர்கள் அடாவடியாக மாற்றப்படுவதில் இருந்தே அப்பகுதியில் உள்ள நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். கோவை- கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர் ஒட்டிய வாகனத்தை முந்திச் சென்றதற்காக ஹிந்து இளைஞரும் அவரது வாகனமும் தாக்கப்பட்டது; காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. பேருந்து ஓட்டுனர் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்களால் ஆத்துப்பாலம் பகுதியில் தாக்கப்பட்டபோதும் இதே நிலைமை தான் காணப்பட்டது. காவல்துறையும் உளவுத்துறையும் கோவையில் இயங்குகின்றனவா என்பதே புலப்படவில்லை. 
 
-----------------------------------
விஜயபாரதம் (03.05.2013)