செவ்வாய், மார்ச் 29, 2011

‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை


சந்தேகமில்லாமல், இந்தத் தேர்தலில் பல தரப்பினரின் அனுதாபத்தை சம்பாதித்திருப்பவர் மதிமுக தலைவர் வைகோ தான். அவரே ஒரு (விகடன்) நேர்காணலில் கூறி இருப்பது போல, பல ஆயிரம் பொதுக்கூட்டங்களில் பேசிக் கிடைத்த பெருமையை இந்த இரண்டு வார மௌனம் அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்காக அவர் ஒரு தேர்தலை இழந்திருக்கிறார். 'இந்தத் தேர்தலை வேண்டுமானால் இழந்திருக்கலாம்; ஆனால் தேர்தலுக்குப் பின்னும் இருப்போம்' என்று பூடகமாகக் கூறி இருக்கிறார், வைகோ.


ஆனால் பலரும் இப்போது அனுதாபப்படுவது போல, அவர் மிகவும் தெளிவான தலைவராக இருக்கவில்லை என்பது, அவரது அரசியல் வாழ்வைக் கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்களுக்குத் தெரியும்.


தேர்தல் காலத்தில் செல்லாக்காசுகள் கூட ஆர்ப்பரிக்கும் நிலையில், கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்....

.............
..........................................
'யாருக்கும் வெட்கமில்லை' என்ற தலைப்பில் 'துக்ளக்' சோ எழுதிய நாடகம் தான் நினைவில் வருகிறது. அரசியலில் நிலைக்கவும் வெற்றிகளைக் குவிக்கவும் கொள்கையற்ற கூட்டணிகளில் கும்மாளமிடும் தமிழக அரசியல் கட்சிகளின் இழிநிலையை, மதிமுகவின் வெளியேற்றம் தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறது.


அந்த வகையில் நமது நன்றிக்குரியவராக மாறி இருக்கிறார் வைகோ. தாவும் பாவங்களில் அவர் முற்காலத்தில் ஈடுபட்டிருந்தாலும், இப்போது அவர் காக்கும் அமைதி அவரது கௌரவத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் நடக்கவுள்ள இசை நாற்காலி விளையாட்டில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது என்பதை இப்போதே உறுதியாக நம்பி மகிழலாம்.....


--------------------------------

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

2 கருத்துகள்:

  1. ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சரியான அரசியல்வாதியாக வைகோவை பலர் தற்போது அடையாளம் கண்டு குறிப்பிடுகிறார்கள்.
    சறிதாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து.

    பதிலளிநீக்கு
  2. உங்களது கருத்து உண்மைதான். தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல்வாதி இருக்கின்றார் என்பதை வைகோ நிருபித்து இருக்கிறார். இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக வைகோ வருவது தமிழகத்திற்கு நல்லதாக அமையலாம். நடுநிலையாளர்கள் மத்தியில் இப்போது வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது.

    பதிலளிநீக்கு