வியாழன், ஜூலை 05, 2012

உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்


வாஸ்கோ ட காமா - 1500 களில் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிரிக்கா வழியாக கடல் வழியைக் கண்டுபிடித்த மாலுமி என்று சரித்திரத்தில் போற்றப்படுபவர். இந்தியாவில் முதல் ஐரோப்பிய குடியேற்றத்தை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர் என்று தான் நாம் வரலாற்றில் படிக்கிறோம். இது எவ்வளவு தூரம் உண்மை?

இந்தியாவுக்கு பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்து மிளகு வாங்க வந்த வாஸ்கோ ட காமா எவ்வாறு இந்தியாவில் போர்ச்சுக்கல் நாட்டின் வைஸ்ராயாக மாற முடிந்தது? அவருக்கு இந்திய மண்ணில் எந்த எதிர்ப்பும் இல்லையா? உண்மையிலேயே அவர் வணிக நோக்கம் கொண்டவர் தானா? அவரது கடல் பயணத்தில் கிறிஸ்தவ மதப் பரப்பு நோக்கம் இருந்து குறித்து ஏன் மழுப்பப்படுகிறது? இந்தக் கேள்விகள் சாமர்த்தியமாக நமது வரலாற்று நூல வடிவமைப்பாளர்களால் மறைக்கப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன?

வாஸ்கோ ட காமாவின் வருகை அன்றைய கேரளாவைப் பொறுத்த வரை மிகவும் பீதியூட்டும் கொடிய அனுபவம். இதை பல ஐரோப்பிய நூலாசிரியர்களே பதிவு செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மத வெறியும் நாடு பிடிக்கும் பேராசையும் கொண்ட ஒரு கடற் கொள்ளையன் தான் வாஸ்கோ ட காமா என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒளிப்பதிவுத் திலகமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் தான் உருமி. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரூ. 20 கோடி செலவில் வெளியாகி உள்ள இப்படம், வாஸ்கோ ட காமா குறித்து நம் நாட்டில் நிறுவப்பட்டுள்ள பல பொய்க் கதைகளை அம்பலப்படுத்துகிறது....


முழு காண்க: தமிழ் ஹிந்து

---------------------------

விஜயபாரதம் (13.07.2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக