வியாழன், செப்டம்பர் 02, 2010

வன இருள் நீக்கிய ஆதவன்

இதய அஞ்சலி


ராமனின் நிழலாய் வாழ்ந்த
நாயகன் பெயரில் பாதி; இந்து
நாமத்தின் உயர்வு சொன்ன
நாவலன் பெயரில் மீதி; கந்த
மால்வனம் சார்ந்த மக்கள்
வாழ்வினை மேம்படுத்த; முந்து
சூலெனத் துணிந்து நின்று
சோதியாய் ஆனாய் போற்றி!

கானக ஏழை மக்கள்
கல்வியைப் பெறுவதற்கும்; இந்து
தானவர் என்று கூறி
தருநிழல் ஆவதற்கும்; சொந்த
சோதரர் திசை மாறாமல்
சுயமாக உயர்வதற்கும்; நந்த
பாலனின் ஜன்மநாளில்
படையலாய் ஆனாய் போற்றி!

நாளெலாம் உழைத்துழைத்தும்
நாடியைக் கருதிடாமல்; நைந்த
தோளினில் காவியேந்தி
தூய்மையாம் அன்பு காட்டி; உந்து
சேவையால் ஒருங்கிணைத்து
செருநரை எதிர்த்துநின்று; ஈந்த
ஆவியால் காத்து விட்டாய்; இந்து
ஆதவா போற்றி! போற்றி!
.
குறிப்பு: ஒரிசா மாநிலத்தில், கந்தமால் மாவட்டத்தில்
வனவாசி மக்களுக்காகப் பாடுபட்டு,
மாவோயிச குண்டர்களால் கோகுலாஷ்டமியன்று படுகொலை செய்யப்பட
சுவாமி லக்ஷ்மணானந்தா- வுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி.
------------------------------------------------------------------------------
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக