திங்கள், நவம்பர் 26, 2012

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்


மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த நவ. 20 ம் தேதி, பூனா, எரவாடா சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப்போவது இது தான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள் வெளிப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இந்த தண்டனை நிறைவேற்றத்தின் பின்னணியில் உள்ள மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்......

காங்கிரஸ் கட்சி எந்தத் தந்திரத்தைக் கையாண்டாலும், கசாப் தூக்கு நிறைவேற்றத்தில் லாபம் காண விரும்பினாலும், நாட்டுநலன் அடிப்படையில் அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம். அதேபோல, கசாப் தூக்கில் இடப்பட்டதைக் கொண்டாடும் மனநிலையும் தேவையில்லை. இந்த அம்பை ஏவியவர்கள் எப்போது வெல்லப்படுகிறார்களோ, அப்போது தான் உண்மையான கொண்டாட்டத்துக்கான தருணம் வாய்க்கும். இதை தேசபக்தர்கள் மறந்துவிடக் கூடாது.

-------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் ( 07.12.2012)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக