ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
............................
.................
உண்மையில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தன்னலமற்ற மீட்புப்பணியால் காக்கப்பட்ட லட்சக் கணக்கான காஷ்மீர மக்களிடம் மத்திய அரசு மீது நல்லெண்ணம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. பேரிடரின்போது ஓடி ஒளிந்த தங்களைப் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள தவறான பிம்பத்தைச் சரிசெய்தாக வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா மீதான நல்லெண்ணம் மக்களிடம் ஏற்பட்டால் தங்கள் ‘பிழைப்பு’ என்னாவது என்ற கவலை அவர்களுக்கு. இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டிய ஊடகங்கள் தங்கள் மனங்களில் புகுந்துள்ள சகதியை வெளியேற்ற வேண்டிய தருணம் இது.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

---------------
விஜயபாரதம் (03.10.2014)

வியாழன், செப்டம்பர் 11, 2014

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?


லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது....
.....................
..............
விரைவில் நடைபெற உள்ள 4 மாநில சட்டசபை தேர்தல்களில் (ஹரியானா, மகாராஷ்டிரா,  ஜார்கண்ட்,  ஜம்மு காஷ்மீர்)  எதிர்க்கட்சிகள் வசமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவது பாஜகவுக்கு முன்னுள்ள கடும் சோதனை. வரவுள்ள நாட்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அணிதிரளும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும், தங்கள் படைகளை வலுப்படுத்துவது அவசியம்.
............
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------
விஜயபாரதம்