வெள்ளி, நவம்பர் 30, 2012

2 ஜி ஏலம்: திருடர்கள் கும்மாளம்நன்றி: மதி/ தினமணி-20.11.2012
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டாவிருப்பாக நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிக்க குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு.....


இந்த ஏலமே மத்திய அரசால் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி நடத்தப்பட்டது தான். அதே சமயம் இதை தனது நிலையை நியாயப்படுத்த கிடைத்த வாய்ப்பாக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஆட்சியில் இருப்பதால் கிடைத்துள்ள அதிகார பலத்தாலும், ஏற்கனவே நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானான நிறுவனங்களின் உதவியாலும், இந்த ஏல விற்பனையை பெயருக்கு நடத்தி இருக்கிறது மத்திய அரசு. ஏலம் நடத்துபவரும் ஏலத்தில் பங்கேற்பவரும் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அது தான் தற்போது நடந்திருக்கிறது....
-------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் (30.11.2012)

திங்கள், நவம்பர் 26, 2012

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்


மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த நவ. 20 ம் தேதி, பூனா, எரவாடா சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப்போவது இது தான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள் வெளிப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இந்த தண்டனை நிறைவேற்றத்தின் பின்னணியில் உள்ள மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்......

காங்கிரஸ் கட்சி எந்தத் தந்திரத்தைக் கையாண்டாலும், கசாப் தூக்கு நிறைவேற்றத்தில் லாபம் காண விரும்பினாலும், நாட்டுநலன் அடிப்படையில் அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம். அதேபோல, கசாப் தூக்கில் இடப்பட்டதைக் கொண்டாடும் மனநிலையும் தேவையில்லை. இந்த அம்பை ஏவியவர்கள் எப்போது வெல்லப்படுகிறார்களோ, அப்போது தான் உண்மையான கொண்டாட்டத்துக்கான தருணம் வாய்க்கும். இதை தேசபக்தர்கள் மறந்துவிடக் கூடாது.

-------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் ( 07.12.2012)


வியாழன், நவம்பர் 08, 2012

திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்


கடந்த செவ்வாய்க்கிழமை (06.11.2012) இரவு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. தெய்வாதீனமாக மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ள ஆனந்த் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் மீதான தாக்குதல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

-------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.