திங்கள், ஜனவரி 11, 2016

மால்டாவும் தாத்ரியும்…சரித்திரம் என்பது அனுபவங்களின் விளைநிலம். அதன்மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் சரித்திரம் தந்த அனுபவங்களிலிருந்து எந்தப் பாடமும் கற்காதவர்கள் தொடர்ந்து துயரங்களையே அறுவடை செய்வர். இதற்கு நமது நாடு மிகச் சரியான உதாரணம்...

அண்மையில் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், காளியாசாக் கிராமத்தில் 2016, ஜனவரி 3-இல் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறை, நமது நாடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் மிக ஆபத்தான சவாலை முன்கூட்டியே நமக்குக் காட்டியிருக்கிறது....

நெருப்புடன் விளையாடுவோர் தீக்காயம் அடைவது உறுதி. பஞ்சாபில் பிந்தரன்வாலேவை வளர்த்துவிட்ட இந்திராகாந்தி சீக்கிய அடிப்படைவாதத்துக்கே பலியானார் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் லாபங்களுக்காக நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைப்பவர்கள், பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இதை மேற்கு வங்க மக்கள் உணராதவரை, இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்; மோசமான அனுபவங்கள் சரித்திரத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

-----------------
விஜயபாரதம்

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
.