சனி, மே 18, 2013

சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அற்புதமான பணி!



தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், அங்கு பயிலும் மாணவ சமுதாயம் நலம் பெற ஓர் அற்புதமான பணியை மேற்கொண்டிருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் குறித்து விருப்பப்பாடமாக படித்தறிய, “LIFE AND MESSAGE OF SWAMI VIVEKANANDA” என்ற  சான்றிதழ்ப் படிப்பை துவங்கியுள்ளது.

இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு பருவத்தில் (செமஸ்டர்) 3 ஊக்கப்புள்ளிகள் (கிரெடிட்) பெறும் வகையில் 45 மணிநேரம் கொண்ட இந்த வகுப்புகளில் சுய விருப்பத்துடன் பங்கேற்கலாம்.  இதில் மாணவர்கள் பெறும் கிரெடிட் மதிப்பெண்கள் அவர்களது படிப்புக்கு பெருமை சேர்க்கும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC- University Grant Commission)  கீழ் இயங்கும் இந்திய தத்துவவியல் ஆராய்ச்சி மையத்தின் (ICPR- Indian Council for Philosophical Research)  அங்கீகாரத்துடன் இதனை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் பாடத் திட்ட விவரம்:

 LIFE AND MESSAGE OF SWAMI VIVEKANANDA

(ICPR  SPONSORED OE COURSE)
Credit: 3
Total hrs: 45.

Objectives:

1 This open elective is introduced in the context of Swami Vivekanand’s 150th birth anniversary.
2  This is also sponsored by the Indian Council of Philosophical Research.
3  This course provides scope to understand the spirit and background of swami’s vision and mission and to evaluate his relevance  today.

Unit: 1     

 Pre monastic life as Naren  –   Socio – Political Milieu of his times – spiritual encounter with Sri Ramakrishna Paramahamsa –  The wandering monk – rediscovery  of India – unique meditation at Kanyakumari.

Unit:2    

 The journey to the West – Chicago address in world parliament of Religions–
Characters of the western hegemony – His contributions and achievements in the West – The Ambassador of Indian culture and tradition.

Unit:3     

     Return  to India as a Hero  – Vision and Mission for real India –  Seed for Indian freedom and Socio – Cultural upsurge – Reaching the unreached – An epic personality as  India condensed.

Unit: 4

The need of Vivekananda today – His thoughts on Indian womanhood, Man making education, Harmony of Religions — His clarion call to the youth of India –   World on Vivekananda..

Reference Books:

1)      Swami Sarvabhutananda     - Exploring harmony among religious traditions in India.
                                                  -  The Ramakrishna Mission Institute of Culture,2008.
2)      Swami Vivekananda               - Lectures from Colombo to Almora  -Advaita Ashram, Oct 2009
3)      Dr.R.C.Majumdar                     – Swami Vivekananda- A Historical Review Advaita Ashram
    Calcutta 1999
4)      Eastern & Western Disciples – Vivekananda the Man and His Message, Advaita Ashrama 2012
5)      Vivekananda Kendra                  Velga Velgave  – Kendra prakashan trust 2010

 .

சாஸ்திரா பல்கலைக்கழகம்: 

Sastra VC
இரா.சேதுராமன்
 .
1984-ல் தஞ்சை, திருமலை சமுத்திரத்தில்  சிறு கல்லூரியாகத்  தொடங்கி, இன்று (SHANMUGHA ARTS, SCIENCE, TECHNOLOGY & RESEARCH ACADEMY – SASTRA) பெரும் பல்கலைக்கழகமாக வளர்ந்தோங்கி உள்ள இதன் துணைவேந்தராக பேராசிரியர் திரு. இரா.சேதுராமன் உள்ளார்.  பல்கலைக்கழக முதன்மையராக (திட்டம் & வளர்ச்சி- டீன்) முனைவர் திரு. வைத்திய சுப்பிரமணியன் உள்ளார்.

9 ஆயிரம் மாணவர்களும் 700 ஆசிரியப் பெருமக்களும் கொண்ட பெரும் கல்வி நிறுவனமாக உள்ள சாஸ்திரா, பொறியியல், அறிவியல், கல்வியியல், மேலாண்மையியல் துறைகளில் பட்டங்களை வழங்குகிறது.
இந்தியப் பண்பாட்டுக் கூறுகளான சமஸ்கிருதம், ஜோதிடம், பரத நாட்டியம்   தொடர்பான படிப்புகள் இங்கு மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. பாரத கலாச்சாரம் காக்கும் பணியில் கல்வித்துறையில் இயங்கி வருகிறது சாஸ்திரா பல்கலைக்கழகம்.

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை முன்னிட்டு, இந்த புதிய படத் திட்டத்தை தங்கள் பல்கலைக்கழகத்தில்  அறிமுகப்படுத்தியுள்ளதாக, பல்கலைக்கழக   துணைவேந்தர்  திரு. இரா.சேதுராமன் கூறியுள்ளார்.
இங்கு பணிபுரியும் பேராசிரியர் திரு. இரா. ஸ்ரீனிவாசன், இதற்கான பாடத் திட்டத்தை வடிவமைத்து, அதற்கான ஆயத்த வகுப்புகளை நடத்தி வருகிறார்.

உயர்கல்வி பெறும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தை அறியவும், நமது அடிப்படை மதிப்பீடுகளை உணரவும் ‘சுவாமி விவேகானந்தர் வாழ்வும் செய்தியும்’ என்ற இந்த பாட வகுப்பு  மிகவும் உதவும்.
சாஸ்திரா  பல்கலைக் கழகத்தைப் பின்பற்றி பிற உயர்கல்வி அமைப்புகளும், இதே திசையில் பயணித்தால் நமது கல்வித்துறை வளம் பெறும்; மாணவர்களும் நலம் பெறுவர்.

காண்க: சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் இணையதளம்

நன்றி: விவேகானந்தம்150 இணையதளம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக