நன்றி: மதி/ தினமணி / 08.05.2013 |
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, அதுபற்றி அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. நீதிமன்றங்களில் குட்டு வாங்கி வாங்கி மண்டை மரத்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு, வெட்கம் மானம் பற்றி கவலைப்பட்டால் தான் ஆச்சரியம்.
ஏற்கனவே ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றங்களில் சந்தி சிரித்தது. அதற்கு பலிகடாவாக ஆ.ராசா கிடைத்தார். நம்பகமுள்ள ‘கூட்டாளி’யான திமுக-வை பணயம் வைத்து அந்த ஊழல் சேற்றிலிருந்து அபோதைக்கு தப்பினார்கள் பிரதமரும், ப.சி.யும். இப்போதும் அது ஒரு கொடுங்கனவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத் துரத்திக் கொண்டிருக்கிறது.....
இதனிடையே சி.பி.ஐ. யை கூண்டுக்கிளியாக வர்ணித்து உச்சநீதிமன்ற நீதிபதி வேறு கடுப்பேற்றினார். ‘‘சிபிஐ கூண்டுக்கிளியாக மாறி விட்டது. அதற்கு பல எஜமானர்கள் உள்ளனர். தனது எஜமானர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல சிபிஐ செயல்படுகிறது. சிபிஐயின் வேலை அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதல்ல. நேர்மையாக விசாரணை நடத்துவதுதான்’’ என்று மீண்டும் ஒரு குட்டு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதை சி.பி.ஐ. இயக்குனரே தனது பேட்டியில் ஒப்புக்கொண்டும் விட்டார். மத்திய அரசுக்குத் தான் உரைக்கவில்லை....
--------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (17.05.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக