வெள்ளி, நவம்பர் 30, 2012

2 ஜி ஏலம்: திருடர்கள் கும்மாளம்நன்றி: மதி/ தினமணி-20.11.2012
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டாவிருப்பாக நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிக்க குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு.....


இந்த ஏலமே மத்திய அரசால் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி நடத்தப்பட்டது தான். அதே சமயம் இதை தனது நிலையை நியாயப்படுத்த கிடைத்த வாய்ப்பாக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஆட்சியில் இருப்பதால் கிடைத்துள்ள அதிகார பலத்தாலும், ஏற்கனவே நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானான நிறுவனங்களின் உதவியாலும், இந்த ஏல விற்பனையை பெயருக்கு நடத்தி இருக்கிறது மத்திய அரசு. ஏலம் நடத்துபவரும் ஏலத்தில் பங்கேற்பவரும் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அது தான் தற்போது நடந்திருக்கிறது....
-------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் (30.11.2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக