மியான்மருக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தின் பதிலடி (2015, ஜூன் 9) |
................................... இந்திய ராணுவம் போல பரிதாபத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் எளிதில் தாக்கும் இலக்காக நமது வீரர்களை சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகவே இருந்து வந்துள்ளது. எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத நிலையில், எதிர்த் தாக்குதலுக்கு அரசியல் அதிகார பீடத்திலிருந்து சமிக்ஞை கிடைக்காத நிலையில், கைவிடப்பட்டவர்களாகவே அவர்கள் பெரும்பாலும் போராடி வந்திருக்கிறார்கள்.
.......................................................
இத்தகைய மோசமான நிலைப்பாடு தற்போது மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் புலப்படத் துவங்கியிருக்கின்றன. அதில் பாதுகாப்புத் துறையும் முக்கியமானது. பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பிறகு அதன் செயல்பாடுகள் புது வேகம் பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் மியான்மர் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய மணிப்பூர் பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்.
..............................
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-----------------
விஜயபாரதம் (26.06.2015)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக