திங்கள், ஜூன் 15, 2015

சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!


மியான்மருக்குள் நுழைந்த
இந்திய ராணுவத்தின் பதிலடி (2015, ஜூன் 9)

................................... இந்திய ராணுவம் போல பரிதாபத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் எளிதில் தாக்கும் இலக்காக நமது வீரர்களை சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகவே இருந்து வந்துள்ளது. எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத நிலையில், எதிர்த் தாக்குதலுக்கு அரசியல் அதிகார பீடத்திலிருந்து சமிக்ஞை கிடைக்காத நிலையில், கைவிடப்பட்டவர்களாகவே அவர்கள் பெரும்பாலும் போராடி வந்திருக்கிறார்கள்.

.......................................................

இத்தகைய மோசமான நிலைப்பாடு தற்போது மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் புலப்படத் துவங்கியிருக்கின்றன. அதில் பாதுகாப்புத் துறையும் முக்கியமானது. பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பிறகு அதன் செயல்பாடுகள் புது வேகம் பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் மியான்மர் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய மணிப்பூர் பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்.
..............................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-----------------
விஜயபாரதம் (26.06.2015)

ஞாயிறு, மே 17, 2015

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!


ஒரே நாளில் எல்லா விஷயங்களும் தலைகீழாக மாற வேண்டுமானால், உங்களுக்கு  ‘விபரீத ராஜயோகம்’ இருக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தண்டனையும் அபராதமும் மேல்முறையீட்டில் ரத்தாகி இருப்பது விபரீத ராஜ யோகத்திற்கு உதாரணம்....

...............
.....

 ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு. 

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (05.06.2015)