புதன், மார்ச் 23, 2011

அகந்தையால் தடுமாறும் அ.தி.மு.க; நிம்மதி பெறுகிறது திமுக!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் ஒரு நூலிழை தான் வித்யாசம் என்பார்கள்- அதி புத்திசாலிக்கும் பைத்தியத்திற்கும் இருக்கும் அதே நூலிழை வித்யாசம் தான். இந்த வித்யாசம் தான் வாழ்வை இயக்குகிறது. தன்னை உணர்ந்தவன் சாதனை புரிகிறான். தன்னை மாபெரும் சாதனையாளன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்பவன் சோதனைகளை அடைகிறான். கடைசியில் அவனுக்கு வேதனை தான் மிஞ்சும்.

தேர்தல் களத்தில் தத்துவமா என்ற கேள்வி எழலாம். குருக்ஷேத்திர போர்க்களத்தில் தானே கீதை ஞானம் பிறந்தது? தமிழக தேர்தல் களம் இப்போது வைகோவுக்கு மயான வைராக்கியத்தையும், தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா குறித்த மனச் சித்திரத்தையும் அளித்திருக்கிறது. ஒருவகையில், தேர்தல் முடிவுகளை நிர்மாணிக்கும் முக்கிய கருதுகோள்களை, அண்மைய தேர்தல் நிகழ்வுகள் அளித்துள்ளன.....
....................
திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகம் சந்தி சிரித்திருந்த நிலையில், ஆண்டிமுத்து ராசாவின் பினாமி கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி (மார்ச் 16) ஆளும் கூட்டணி திகைப்பில் ஆழ்ந்திருந்த தருணம், ஜெயலலிதா நிகழ்த்திய இமாலய சறுக்கல், சற்றும் எதிர்பாராதது. வைகோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் முடிவில் ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்த 160 அதிமுக வேட்பாளர் பட்டியல், அவரது கூட்டணித் தோழர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. 'ஜெயலலிதா மாற மாட்டார்' என்ற பேச்சுக்கள் புழங்கத் துவங்கின.
...................
தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் போன்ற காரணங்களால்தான் முந்தைய காலங்களில் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார். தற்போது அவர் மாறிவிட்டார் என்று நம்பப்பட்டு வந்தது. திமுக தலைமையின் அதி பயங்கர ஊழல்களுக்கு ஒரே மாற்றாக ஜெயலலிதா உருவாவார் என்ற நம்பிக்கை காரணமாகவும் அவரது பழைய குணாதிசயங்களை மறக்க தமிழகம் தயாராக இருந்தது. அந்த எண்ணத்தைத்தான், ஜெயலலிதா தனது ஒரே பட்டியலில் தகர்த்து எறிந்தார்....
...................
--------------------
நன்றி: விஜயபாரதம் (01.04.2011)
.

9 கருத்துகள்:

 1. ஊழல் சுனாமியை பூமி அதிர்ச்சியில் ஊதித்தள்ளிய பேதை பெண்!

  பதிலளிநீக்கு
 2. Now at present Jaya is a better option for a changeover. It it time to say good bye to DMK now. A general opinion from public would be the same.

  A.R.Seetharaman

  பதிலளிநீக்கு
 3. yaarume suththam ille , paavam makkal sashikala jayavai konnuttu ella soththum surutta porraa edhuthan 100% unmai , padikkathavangka vayadhaanavangka therthalil nikka laayakke illaathavanganu sattam varanum naattai mattum elle thamilakaththaiyum kaakka mudiyaathu,

  பதிலளிநீக்கு
 4. அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அதிகப்படியான அட்டை காப்பி இலவசங்களிலே தெரிகிறது .. கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர்கள் இப்போ என்ன பதிவு போடறங்கனு பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 5. //தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் //
  சோ குருவானால் இந்தப் பாடம் படிக்காமல் இருக்கமுடியுமா?
  இவற்றைத் தானே; ஜெயலலிதாவின் சிறப்பாகப் போற்றிப் புகழ்கிறார். ராஜகுரு- சோ

  பதிலளிநீக்கு
 6. 'ஜெயலலிதா மாற மாட்டார்' என்ற பேச்சுக்கள் புழங்கத் துவங்கின.
  ...................
  தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் போன்ற காரணங்களால்தான் முந்தைய காலங்களில் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார்

  Frame pottu maatta vendiya varigal!!!
  100% correct.

  பதிலளிநீக்கு
 7. Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN.

  Dear Voters be careful..

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

  http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.html

  பதிலளிநீக்கு
 8. sentra 2006 therthalilaeyae jaya ilavasa computer maanavarkalukku koduppathaaka kooriullaar . athai karunaakanithi kaappiadiththu 2011 therthalil ariviththullaar!!! kerala, merkkuvankam,aakiya maanilaththilum ilavasangkal vazhangkuvathaaka kuuri ullanar!!

  பதிலளிநீக்கு
 9. இங்க ராஜெஷ் என்கிற ஒரு திமுக அல்லக்கை எல்லா பிளாக்குலயும் கொடுக்கபட்ட கஞ்சிக்கு ஏற்ப ஒரே பின்னூட்டத்தை இட்டிருக்கிறது.. நண்பர்கள் அனைவரும் இன்றைய தேர்தல் பற்றிய பிளாக் எழுத்துகளை பார்க்கவும் ...என் பேச்சில் சந்தேகம் இருப்பின்.

  பதிலளிநீக்கு