திங்கள், அக்டோபர் 15, 2012

தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்


“அடிக்கடி பிள்ளைப்பேறு, அன்னையின் உடல்நலத்துக்குக் கேடு” என்ற விளம்பர வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதுபோலவே, அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்வது அரசின் நிர்வாகத்துக்குக் கேடாக முடியும். தமிழக அமைச்சரவை எட்டாவது முறையாக (அக். 5  நிலவரம்) மாற்றி அமைக்கப்பட்டிருப்பது, அரசின் நிர்வாகம் எந்த அளவுக்குக் குலைந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு மூன்றாவது முறையாக மே 16, 2011-இல் பதவியேற்றது. அதில் 34 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றார்கள். அதில் இதுவரை 15 பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் விபத்தில் காலமான மரியம் பிச்சை, உடல்நலக்குறைவால் இறந்த ஜி.கருப்புசாமி ஆகியோரைத் தவிர்த்து, மீதமுள்ள 13 பேரும் முதல்வரின் அதிருப்தி காரணமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். பதவி இழந்தவர்களில் சிவபதிக்கு மட்டுமே மீண்டும் அமைச்சராகும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இதுவரை அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்...

-----------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் (19.10.2012 )
.

புதன், அக்டோபர் 03, 2012

விவசாயிகளைப் பாதுகாப்போம்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.

பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்....

----------------------------------
நண்பர் ஈரோடு சு.சண்முகவேலின் 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூல் குறித்த விமர்சனம்: தமிழ் ஹிந்து