மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.
பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்....
----------------------------------
நண்பர் ஈரோடு சு.சண்முகவேலின் 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூல் குறித்த விமர்சனம்: தமிழ் ஹிந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக