....ஆரம்பத்தில் பாஜகவையும் அதன் கூட்டணி
முயற்சிகளையும் கண்டுகொள்ளாத தமிழக அரசியல் கட்சிகள், பிறகு அதனை ஏளனமாக
விமர்சித்தன. மோடி அலை எங்கும் வீசவில்லை என்பதே பாஜகவின் எதிரிகளின் தொடர்
முழக்கமாக இருந்தது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும்
திமுகவும் பாஜகவை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்த்து வந்தன. பாஜக
அரசியல்களத்தில் இல்லாதது போலவே அவை நடித்துவந்தன.
ஆனால், தேர்தலுக்கு 10 நாட்கள்
இருக்கும்போது திடீரென, தமிழக அரசியல்வானில் ஏற்பட்ட மாற்றம், காற்றழுத்தத்
தாழ்வு மண்டலத்தைவிட வேகமான தோற்றமாகக் காட்சி தருகிறது. இதற்கு தேசிய
அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுவரும் அபரிமித ஆதரவு
ஒரு காரணம் என்றால், தமிழகத்தில் ஆர்ப்பாட்டமின்றிப் பரவிவரும் மோடி ஆதரவு
நிலையும் ஒரு காரணம்....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
------------------------
விஜயபாரதம் (02.05.2014)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக