....சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் யுத்தத்தின் கடைசி இரண்டு நாட்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த கொலைவெறிக்கு உதவியது அப்போதைய மன்மோகன் சிங்- சோனியா அண்ட் கோ தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு தான். அந்தக் கூட்டணியில்- வெற்று அறிக்கைகளை வெளியிட்டபடி இருந்த கருணாநிதியின்- திமுகவும் இருந்தது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலைக்கு பதிலடியாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது என்ன?
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 27 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஈழத் தமிழரின் சர்வ நாசத்துக்குக் காரணமான இக்கட்சிகளுக்கு வாக்களித்த அதே தமிழகத்தில் தான் இன்று அனாவசிய கொந்தளிப்பு.
திமுக தலைவர் ’கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்த கதையாக ஆளும் கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. தமிழக மக்கள் மட்டும் என்னவாம்? இன்று காட்டும் இதே தீவிரத்தை 2009 ல் காட்டி இருந்தால், அன்றைய தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாடம் புகட்டி இருந்திருந்தால், இலங்கை வாழ் தமிழரின் நிலைமை மிகவும் கேவலப்பட்டுப் போயிருக்குமா?...
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
------------------
விஜயபாரதம் (05.04.2013)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக