ஞாயிறு, அக்டோபர் 19, 2014

எல்லையில் மீண்டும் போர்மேகம்



கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள அரசியல்வாதிகளின் அத்தியாவசியத் தேவையாக மாறிப்போனது....

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-----------------------
விஜயபாரதம்

வியாழன், அக்டோபர் 02, 2014

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!


கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?

-என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன.
................................
......................
1950-ல் இயற்றப்பட்ட நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் முக்கிய குறிக்கோளே, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான். உண்மையில் பேச்சுரிமை, எழுத்துரிமை போல, மதுவிலக்கைக் கோருவதும் உறுதிப்படுத்துவதும் குடிமக்களாகிய நமது உரிமை; நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதற்பெரும் கடமையும் கூட.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (10.10.2014)