...நீதிபதிகளும் தனிநபர்களே. அவர்களது
விருப்பு வெறுப்புகளும், அரசியல் சார்புகளும் நீதிபதிகளின் நியமனங்களில்
வெளிப்பட்டால், எதிர்காலத்தில் நீதித்துறை முற்றிலும் நிலைகுலைந்துவிடும்.
அதற்கான எச்சரிக்கையே தற்போதைய நிகழ்வுகள் எனில் மிகையில்லை.
மக்கள் பிரதிநிதிகள் தேர்தலிலேனும்
மக்களால் மதிப்பிடு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதிகார வர்க்கமும்
அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், நீதிபதிகள்
மட்டும் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் போல யாருக்கும் கட்டுப்படத்
தேவையில்லை என்பதே ஒருவகையில் முறைகேடுகளை ஊக்குவிக்கிறது. மாவட்ட
நீதிபதிகள் நியமனங்களில் கிளம்பிவரும் ஊழல் புகார்கள் சமீபகாலமாக
அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் காரணம், தங்களைத் தாங்களே
நியமித்துக்கொள்ளும் நீதித்துறையின் சுயஆட்சி முறை தான். இதற்கு சில
கட்டுப்பாடுகள் தேவை.....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-------------------
விஜயபாரதம்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக