திங்கள், ஜனவரி 07, 2013

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

அகற்றப்பட்ட உத்தப்புரம்  தீண்டாமைச் சுவர்

கூனிக் குறுகும் நமது முன்னோடிகள்…

நமது சமூக வீழ்ச்சியின் விளைவாக, நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் விசனத்துக்குரிய விஷயம். நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய அந்தத் தலைவர்கள் இன்று இருந்திருந்தால், முச்சந்திகளில் நிற்கும் தங்கள் சிலைகள் போலவே கல்லாய் சமைந்திருப்பார்கள்....

இதுதான் நமது வீழ்ச்சியின் காரணம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும், வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், டாக்டர் அம்பேத்கரையும், கர்மவீரர் காமராஜரையும், தீரன் சின்னமலையையும், திருப்பூர் குமரனையும், ஜாதி வட்டாரத்தில் திணித்துவிட்டோம். நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம். நமக்கு கிடைக்குமா மீட்சி?....
 
-----------------------------
முழு கட்டுரையைக் காண்க:  தமிழ் ஹிந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக