செவ்வாய், டிசம்பர் 21, 2010

அரசுக்கு விண்ணப்பம்

1963 ல் தில்லியில் நடந்த குடியரசுதின அணிவகுப்பில்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு.

அக்னியை சிறைசெய்ய எண்ண வேண்டாம்;
ஆதவனை மறைத்துவைக்க முயல வேண்டாம்!
இடிமுழக்க ஓசையினை மறுக்க வேண்டாம்;
ஈடில்லா இயக்கமடா எங்கள் சங்கம்!

உண்மையினைப் பொய்களினால் மூட வேண்டாம்;
ஊதற்காற்றாய்ச் சீறும் எங்கள் சங்கம்!
எழுந்துவிட்ட ஹிந்துக்கள் இதயம் நாங்கள்;
ஏனிதனைத் தடை செய்து மாளுகின்றாய்?

ஐயையோ எனப் புலம்பி அரற்ற வேண்டாம்!
ஒற்றுமையைக் கண்டென்றும் அஞ்சலாமா?
ஓடையல்ல எம்சங்கம் அணைகள் கட்ட;
ஔவியத்தால் சமுத்திரத்தைத் தடுக்க வேண்டாம்!

------------------------------
நன்றி: விஜயபாரதம் (18.02.2000)
குறிப்பு: தற்போதைய சூழலைக் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக