செவ்வாய், ஜூன் 19, 2012

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?


...அண்மையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை முக்கியமான ஒரு வழக்கில் மிக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதியான ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது மதுரை நீதிமன்றம். இதன்மூலமாக, ப.சிதம்பரத்தின் தார்மிக அடிப்படை குலைந்துள்ளது. ஆனாலும், அவர் தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை ஒரு எறும்புக்கடி போல புறம் தள்ளி இருக்கிறார். வார்டு கவுன்சிலராகக் கூட வெல்லாத தனது மகனைக் கொண்டு தனது ‘பின்களப்’ பணிகளை நிறைவேற்றிவரும் ப.சிதம்பரத்திடம் தார்மிக நெறிமுறைகளை எதிர்பார்த்தால் அது தான் நமது அறிவீனம்...

ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சி. பெயரைச் சேர்க்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி நடத்திவரும் நீதிமன்ற யுத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழல்களிலும் ப.சி, அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவற்றையே கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சி, மதுரை நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவா போகிறது? தார்மிக நெறிகளை தர்மவான்களிடம் தான் எதிர்பார்க்க முடியும்; தரித்திரர்களிடம் அல்ல. இதுவே ப.சி. தேர்தல் வழக்கு சுட்டிக்காட்டும் உண்மை...

----------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (29.06.2012)
.

2 கருத்துகள்: