வெள்ளி, அக்டோபர் 01, 2010

சபதம் ஏற்போம்!


.
.
.
.
..
....
..
.
.
அயோத்தி மண்ணை மீட்டோம்- இனிமேல்
அடிமைச் சிந்தனை மாய்ப்போம்!

அந்நியன் எழுதிய சரித்திரத்தாலே
அல்லல் பட்டது போதும்!
இன்னுயிர் தன்னை ஈந்தவர் தியாகம்
இனிமேலேனும் காப்போம்!

பார்புகழ் நாட்டின் பண்டைய நிலையைப்
பார்த்திடத் துள்ளுது உள்ளம்!
ஆர்த்திடும் அலையாய் அயலவர் நடுங்கிட
ஆடுது மக்களின் வெள்ளம்!
.
வழிபடு முறைகள் வேறுபட்டாலும்
வலியநல் ஒற்றுமை கண்டோம்!
இழிவுகள் நீக்கிடப் புறப்படுகின்றோம்-
இன்றே சபதம் ஏற்போம்!

உடைமை என்பது நமதே - அதிலே
உரிமை பிறருக்கில்லை!
அடிமைச் சிந்தனை மாய்ப்போம் - தேவி
அன்னை பாரதம் வாழ்க!
.
அயோத்தி மண்ணை மீட்டோம்- இனிமேல்
அடிமைச் சிந்தனை மாய்ப்போம்!
-----------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (19.06.1998)
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளதைக் கருதி நினைவுகூரப்படுகிறது.
.

1 கருத்து: